நம்முடைய இந்து மத ஆன்மீக சாஸ்திரத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு நல்ல நேரம் பார்த்து எடுக்கச் சொல்வது வழக்கம். பல முக்கிய முடிவுகள் நேரம், காலம் பார்த்து தான் எடுக்கப்படுகின்றன. முக்கிய ஆவணங்களில் கையெழுத்து போடுவது, திருமணத்திற்கு பெண் பார்ப்பது போன்ற விஷயங்களில் நாம் நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து செய்யும் பொழுது வெற்றி உண்டாகும் என்று ஜோதிட நூல்கள் பல கூறுகின்றன. ஆனால் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது நேரமெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது போய்விடும். அதுபோன்ற நேரத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்குமா? என்கிற மன பயம் நீங்குவதற்கு இந்த பரிகாரத்தை செய்து விடலாம். அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.
பல முக்கிய முடிவுகள் அவசரமாக எடுக்கும் பொழுது பஞ்சாங்கத்தை எல்லாம் தேடிக் கொண்டிருக்க முடியாது. கரி நாள், ராகு காலம், எமகண்டம் போல ஏதாவது ஒரு தோஷமான நேரமாக அமைந்து விட்டால் என்ன செய்வதென்றே தெரியாமல் போய்விடும். அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று நம் ஆன்மீக சான்றோர்கள் கூறியுள்ளனர்.
அவசரமான அந்த நேரத்தில் நல்ல நேரம் பார்ப்பதா? அல்லது அந்த முடிவை எடுத்து விடுவதா? என்கிற மன குழப்பம் இருக்கும். தொழில் சம்பந்தமான ஒப்பந்தங்கள் போடுவது, அரசு வழி ஆவணங்களை சமர்ப்பிப்பது, பள்ளி அல்லது கல்லூரி நுழைவு தேர்வு விஷயங்கள், பல முக்கிய மனிதர்களுடைய சந்திப்பு, அரசியல் பேச்சு வார்த்தைகள், பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பேச்சுக்கள், வெளியூர், வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வது அல்லது அதைப் பற்றிய பேச்சுகளை பேசும் பொழுது நல்ல நேரம் காலம் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
நேரம், காலம் பார்க்காமல் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் மன பயத்தை உண்டாக்கும். ஒரு திருமணம் செய்யும் பொழுது நல்ல நேரம் பார்த்து செய்யும் பொழுது தான் நமக்கு அதில் முழு திருப்தி உண்டாகிறது. ஒரு நிமிடம் காலதாமதமானாலும் நெஞ்சமெல்லாம் பதறி போய்விடும். எந்த ஒரு விஷயத்திற்கும் நல்ல நேரம் பார்த்து செய்து பழகியவர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது மனப் பதட்டம் என்பது இருக்க தான் செய்யும். இது போன்றவர்கள் இந்த சிறு பரிகாரத்தை செய்து விட்டு முடிவு எடுத்தால் மனதிற்குள் இருக்கும் பயம் நீங்கும்.
இப்படி நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் அவசரமாக எடுக்கும் பொழுது சற்றும் யோசிக்காமல் ஒரு சிறு மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை முடிந்து வைத்து அதை பூஜை அறையில் அல்லது நீங்கள் இருக்கும் இடத்தில் இருக்கும் சுவாமி படத்திற்கு முன்பு வைத்து விடுங்கள். விநாயகர் படத்தின் முன்பு வைப்பது இன்னும் தைரியத்தை கொடுக்கும். அதன் பின் நீங்கள் எடுக்கும் எந்த முடிவையும் தைரியமாக துணிச்சலுடன் எடுத்து விடுங்கள்.
இது நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த ஒரு விஷயம் தான். காசு முடிந்து வைத்து, வேண்டும் வேண்டுதல்கள் உண்மையில் பலிப்பதாக பல நம்பிக்கையான சான்றுகள் உள்ளன. முக்கிய முடிவுகளை அவசரமான நேரத்தில் எடுக்கும் பொழுது மனபதட்டம் நீங்க இது போல் காசு முடிந்து வைத்துவிட்டு எடுப்பது நல்ல ஒரு தீர்வாக அமையும். நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு பலன் காணும் பொழுது முடிந்து வைத்த ரூபாயை அப்படியே கொண்டு போய் கோவில் உண்டியலில் சமர்ப்பித்து விடுங்கள்.
The post முக்கிய முடிவுகளை எடுக்க நல்ல நேரம் அமையவில்லையா? எனில் உடனே இந்த பரிகாரத்தை செய்து விட்டு எடுங்கள்! வெற்றி நிச்சயம்! appeared first on Dheivegam.
from Dheivegam https://ift.tt/3bMRtMZ

https://ift.tt/3ePhFstvia IFTTT
No comments:
Post a Comment