காலை சூரிய உதயத்திற்கு முன்பாக வாசல் தெளித்து கோலம் போடும் பழக்கமே கொஞ்சம் கொஞ்சமாக இப்போது மறைந்து வருகிறது. சூரிய உதயத்துக்கு பின்பு நிறையபேர் இன்றைய சூழ்நிலையில் வாசல் தெளித்து கோலம் போடும் பழக்கத்தை வைத்துள்ளார்கள். முடிந்தவரை 6 மணிக்கு முன்பாக வாசல் தெளித்து கோலம் போடுவது, நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை தேடித்தரும். சரி, இது ஒரு பக்கம் இருக்க, வெள்ளிக்கிழமைகளில் நம்முடைய வீட்டு வாசலில் எப்படிப்பட்ட கோலங்களைப் போட்டால், அந்த மகாலட்சுமி நம் வீட்டிற்குள் மனநிறைவோடு, அழைக்காமலேயை வருகை தருவாள், என்பதை பற்றிய ஒரு சின்ன தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
நிறைய பேருக்கு இந்த தகவல் தெரிந்து இருக்கலாம். இருப்பினும் தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா அதற்காகவே இந்த பதிவு. இந்தக் கோலம் உங்கள் வீட்டு வாசலில் இருந்தால், அழையா விருந்தாளியாக வீட்டிற்குள் நுழைய, அந்த மகாலட்சுமியே மனமுருக ஆசைபடுவாள். பார்த்துக் கொள்ளுங்கள்! அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த அழகான கோலம் இது.
இன்றைய சூழ்நிலையில் நிறைய பேருடைய வீட்டில் விரும்பி விரும்பி அழைத்தால் கூட, மகாலட்சுமி அந்த வீட்டிற்குள் நுழைவதற்கு சம்மதம் தெரிவிப்பது இல்லை. காரணம் வெறும் காசுக்காக மட்டும் அவளை நம் வீட்டிற்குள் அழைக்கக்கூடாது. மன மகிழ்ச்சி, அமைதி, சந்தோஷம், சுத்தம், அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற குணம் இத்தனை குணங்களும் சேர்ந்து எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டில் காசு பணத்திற்கு குறைவில்லாமல் பார்த்துக்கொள்ள மகாலட்சுமியே வீடு தேடி வருவாள்.
சரிங்க, மகாலட்சுமி மனதைக் கவரக்கூடிய அந்தக் கோலம், எந்த கோலம்? நாம் எல்லோரும் அறிந்த, நாம் எல்லோரும் தெரிந்த, காவி போட்ட கோலம் தான் அது. இன்றைக்கு அழகிற்காக பல வர்ணங்களை தீட்டி வீட்டு வாசலில் கோலம் போட்டு வருகின்றோம். இருப்பினும் கோலம் என்றால் அதை சரியான முறையில் எப்படி போடுவது? சிவப்பு நிறத்தில் இருக்கும் காவியை மெழுகி, அதன் மேல் வெள்ளை நிறத்தில் அரிசிமாவில் கோலம் போட வேண்டும்.
தினம்தோறும் உங்களால் இப்படி கோலம் போட முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. காவியை மெழுகி கோலம் போட முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. சாதாரணமாக வெள்ளை நிறத்தில், அரிசிமாவில் கோலம் போட்டு அந்த கோலத்திற்கு காவி நிறத்தில் லேசாக வண்ணம் தீட்டி வைக்கலாம். வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது இப்படி கோலம் போடும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். வெள்ளை நிறமும் காவி நிறமும் சேர்ந்திருக்கும் வாசலை பார்க்கவே இரண்டு கண்கள் போதாது. இதனுடைய அழகு கொள்ளை அழகு. மனிதர்களுடைய மனதையே இப்படி கொள்ளையடிக்கும் அந்த கோலம், மகாலட்சுமியின் மனதை கொள்ளை அடிக்காதா என்ன?
இந்த வெள்ளை நிறத்திற்கும் காவி நிலத்திற்கும் வேறு ஒரு அர்த்தத்தையும் நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். கோலத்தில் இருக்கும் வெள்ளை நிறம் என்பது சிவனின் அம்சம் என்றும், காவி நிறம் சக்தியின் அம்சமாகவும் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே சிவனும் சக்தியும் சேர்ந்து இருக்கும் இடத்தில் நிச்சயமாக ஐஸ்வர்யத்திற்கு எப்படி குறைபாடு வரும்.
அந்தக் காலத்தில் குடிசை வீடுகளில், வீட்டிற்குள் விஷப்பூச்சிகள் சுலபமாக நுழைந்துவிடும். காவி இருக்குமிடத்தில் விஷ பூச்சிகள் வராது. இதற்காகவும் நம்முடைய முன்னோர்கள் அன்று, வீட்டு வாசலில் காவி தீட்டி கோலம் போடும் பழக்கத்தை வைத்து இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
முடிந்தால் வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்குள் பூஜை அறையில் கூட இப்படியாக காவியை தீட்டி அரிசிமாவில் கோலம் போட்டு பூஜை செய்யலாம். மிகவும் நல்லது. உங்கள் நிலை வாசலில் வெள்ளிக்கிழமை காவியோடு சேர்ந்த கோலத்தை போட்டு பாருங்கள். அன்றைய நாள் உங்களுக்கு மன நிறைவான நாளாக அமையும்.
The post வெள்ளிக்கிழமை வீட்டு வாசலில் இந்தக் கோலம் இருந்தால், உங்கள் வீட்டு பூஜை அறைக்குள் மகாலட்சுமி விரும்பி வந்து அமர்ந்து கொள்வாள். மகாலட்சுமியின் மனதைக் கவரும் கோலம். appeared first on Dheivegam.
from Dheivegam https://ift.tt/39BcOHN

https://ift.tt/3fBmGFsvia IFTTT
No comments:
Post a Comment