இட்லி, தோசை, பூரி, பொங்கல் என்று ஒரேவிதமான டிஃபன் சாப்பிட்டு போர் அடிக்குதா? இன்றைக்கு இரவு அல்லது நாளைக்கு காலை இந்த சப்பாத்தி ட்ரை பண்ணி பாருங்க! இந்த சப்பாத்திக்கு குருமா கூட வேண்டாங்க. அப்படியே இரண்டு சப்பாத்திகளை சாப்பிட்டால் போதும். அந்த அளவிற்கு ஒரு ருசியான சுவையான சிரமமே இல்லாத ஸ்டஃப்டு சப்பாத்தி எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இதை சுலபமாக செய்து விடலாம். கோதுமை மாவு இருக்கா இப்பவே எடுங்க, இப்பவே ட்ரை பண்ணுங்க!
Step 1:
முதலில் 1 கப் அளவு கோதுமை மாவை எடுத்துக்கொண்டு அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொண்டு, 1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, பத்து நிமிடங்கள் வரை ஊற வைத்துவிடுங்கள். மாவு ஊறுவதற்கு ஸ்டஃபிங் தயார் செய்து விட்டு வரலாம்.
Step 2:
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது – 1, தோல் உரித்த – பூண்டு 5 பொடியாக நறுக்கியது, இஞ்சி ஒரு சிறிய துண்டு – பொடியாக நறுக்கியது, கறிவேப்பிலை – ஒரு கொத்து பொடியாக நறுக்கியது, கொத்தமல்லித்தழை – சிறிதளவு பொடியாக நறுக்கியது, பெரிய வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது, தேவையான அளவு உப்பு, கடலை மாவு – 1/4 கப், மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன், மல்லித் தூள் – 1/2 ஸ்பூன், சீரகத்தூள் – 1/4 ஸ்பூன். உங்கள் வீட்டில் கரம் மசாலா அல்லது சாட் மசாலா ஏதாவது இருந்தால் இறுதியாக வாசத்திற்கு சேர்த்துக் கொள்ளலாம். இல்லை அந்த மசாலா வாசம் பிடிக்கவில்லை என்றால் தவிர்த்துக் கொள்ளலாம்.
Step 3:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, கடுகு சீரகம், சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்தபடியாக இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாடை போக வதக்கிய பின்பு, கறிவேப்பிலை கொத்தமல்லி தழையை சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு, அடுத்ததாக பச்சைமிளகாய் சேர்த்து, உப்பு சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும். வெங்காயத்தின் பச்சை வாடை போனால் மட்டும் போதும். 3 நிமிடங்கள் வெங்காயத்தை வதக்கிக் கொள்ளுங்கள்.
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்த உடன். கடலைமாவு சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்து மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் வரை வதக்கினால் போதும். கடலை மாவின் பச்சை வாடை போயிருக்கும். அவ்வளவுதான் மசாலா தயார்.
Step 4:
இப்போது சப்பாத்தி மாவை எடுத்து மீண்டும் ஒருமுறை பிசைந்து உருண்டைகளாக பிடித்து கொள்ளுங்கள். எப்பவும் போல் சப்பாத்தியை ரொம்பவும் மெல்லிசாக தேய்க்காமல், ரொம்பவும் தடிமனாக தேய்க்காமல் ஸ்டஃப்பிங் வெளியில் வராத அளவிற்கு வட்ட வடிவத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு சப்பாத்திக்கு 2 டேபிள் ஸ்பூன் அளவு ஸ்டஃப்பிங் பயன்படுத்தலாம். வட்டமாக தேய்த்து சப்பாத்திக்கு நடுவே ஸ்டஃப்பிங் வைத்து, பக்கவாட்டில் இருக்கும் மாவுகளை எல்லாம் கூம்பாக சேர்த்து, மோதகம் செய்வது போல் வைத்து, அழுத்தி மீண்டும் வட்டவடிவமாக தேய்க்கலாம். ஸ்டஃபிங் வெளியே வருவதற்கு வாய்ப்பில்லை. ஸ்டாப்பிங் உள்ளே வைத்த பின்பு, முடிந்தவரை சப்பாத்தியை மெல்லியதாக தேய்க்கவும். இந்த சப்பாத்தியை தேய்க்கும் போது லேசாக மாவு தொட்டு தேய்த்துக் கொள்ளுங்கள் வசதியாக இருக்கும்.
உங்களால் வட்டவடிவில் எல்லாம் செய்ய முடியவில்லை என்றால், சப்பாத்தி மாவு உள்ளே ஸ்டஃபிங்கை வைத்துவிட்டு, மாவை நான்காக மடித்து முக்கோணமாக வடிவத்தில் கூட சப்பாத்தியை தேய்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம் தான்.
ஸ்டாப்பிங் நிரப்பிய சப்பாத்தியை எப்போதும்போல தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து பொன்னிறமாக சுட்டு எடுத்து கொள்ளலாம். எப்போதுமே சப்பாத்தியை கல்லில் போடும்போது, தோசைக்கல் சுடாக இருக்க வேண்டும். சப்பாத்தியை போட்ட உடனேயே எண்ணையை ஊற்றி விடக்கூடாது. இரண்டு பக்கம் திருப்பி போட்ட பின்புதான் எண்ணெய் ஊற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த குறிப்பை படிப்பதற்கு பெரியதாக இருக்கலாம் ஆனால் செய்வது ரொம்ப ரொம்ப சுலபம்.
இதையும் படிக்கலாமே
எக்காரணத்தைக் கொண்டும், வீட்டின் சமையல் அறையில், பெண்கள் இந்த ஒரு தவறை மட்டும் இனி செய்யவே செய்யாதீர்கள். இந்த சின்ன தவறு, வீட்டின் ஐஸ்வர்யத்தையே குறைத்துவிடும்.
இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.
The post புது விதமான இந்த மசாலா சப்பாத்தி செய்ய 10 நிமிடங்கள் தான் எடுக்கும். சைடிஷ் கூட தேவை இல்லை. இட்லி தோசைக்கு பதில் இத ட்ரை பண்ணி பாருங்க. appeared first on Dheivegam.
from Dheivegam https://ift.tt/2RiZT3G

https://ift.tt/3hr0R8Pvia IFTTT
No comments:
Post a Comment