உங்களால் மட்டும் எல்லாரையும் போல சந்தோஷமாக இருக்க முடியலையா? அப்படி என்றால் நீங்கள் இந்த தவறு செய்கிறீர்கள் என்று அர்த்தம்!

எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது நாம் மட்டும் சோகமாக இருப்பது ஏன்? என்ற கேள்வி பலருக்கும் பல நேரங்களில் மனதிற்குள் எழுந்திருக்கும். மகிழ்ச்சி என்பது எதை சார்ந்து இருக்கிறது என்பது தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அம்சமாகும். எந்த ஒரு விஷயத்தையும் சரியான பார்வையுடன் அணுகும் பொழுது தான் அதனுடைய உள் அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தடையாக இருப்பது என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

munivar

ஒரு முறை சீடன் ஒருவன் தன்னுடைய குருவிடம் நான் மகிழ்ச்சியாகவே இல்லை குருவே! ஏன்? என்று கேட்டான். உடனே குருவானவர், சீடனை அழைத்து கொண்டு அருகிலிருக்கும் தோட்டத்திற்கு சென்றார். அந்த தோட்டத்தில் நிறைய பூச்செடிகள் இருந்தன. பூக்களில் இருக்கும் தேனை எடுக்க பட்டாம் பூச்சிகளும், வண்டுகளும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.

அழகிய வண்ண பட்டாம் பூச்சிகளை பார்க்கும் பொழுதே இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி மனதிற்குள் ஊற்றாக வெளி வந்தது. குரு, சீடனை அழைத்து ஒரு பட்டாம் பூச்சியை பிடித்துக் கொண்டு வா என்று கேட்டார். சீடன், எவ்வளவோ முயன்றும், துரத்தி பார்த்தும் ஒரு பட்டாம் பூச்சியை கூட அவனால் பிடிக்க முடியவில்லை.

butterfly

குருவும் சீடனிடம், சரி வேண்டாம் விட்டுவிடு இங்கு வந்து அமர்ந்து கொள் என்று அழைத்தார். தன் அருகில் அமர வைத்துக் கொண்டார். இருவரும் இயற்கையை ரசித்தபடி அமைதியாக அமர்ந்து தோட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது பட்டாம் பூச்சிகள் இவர்களை சுற்றி சுற்றி வந்தது. அதில் ஒரு பட்டாம்பூச்சி சீடனுடைய கைகளிலேயே வந்து அமர்ந்து கொண்டது. இதனை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சீடன்.

அப்பொழுது குரு சிரித்த படியே சீடனிடம் சொன்னார், சீடா! இவ்வளவு தான் நம்முடைய வாழ்க்கையும். நாம் என்ன தான் தேடித்தேடி துரத்திக் கொண்டு இருந்தாலும் அது நமக்கு திருப்திகரமாக இருக்காது. அமைதியாக வாழ்க்கையை ரசிக்கும் போது தான் மகிழ்ச்சி நம்மைத் தேடி வரும். இப்போது புரிந்து கொண்டாயா? என்று கேட்டார். அதற்கு சீடனும் தலையை ஆட்டி ஆமோதித்தான்.

guru-shishya

வாழ்க்கை என்பது தேடி கிடைக்கும் பொருள் அல்ல. நம் தலையில் என்ன எழுதி இருக்கிறதோ! அது தானாகவே நடக்கும். அதை அமைதியான முறையில் ரசித்து ரசித்து அனுபவித்துக் கொண்டே வேடிக்கை பார்க்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் வலுக்கட்டாயப்படுத்தி அல்லது வற்புறுத்தி பெறுவதில் மகிழ்ச்சி இருக்காது. நம்மைத் தேடி அதுவாகவே வரும் பொழுது அதனுடைய மகிழ்ச்சிக்கு எல்லை என்பதே இல்லை.

yoga

மட்டற்ற மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு உங்களுடைய வாழ்க்கையை அமைதியான முறையில் ரசியுங்கள். ஆர்ப்பாட்டமில்லாமல், ஆடம்பரம் இல்லாமல் மற்றவர்களிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பையும் வைக்காமல், உங்களுடைய நலத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நிமிடத்தையும் ரசிக்கப் பழகிக் கொள்ளுங்கள். அடுத்தவர்களுடன் உங்களை ஒருபொழுதும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். நீங்கள் உங்களுக்காக வாழ பிறந்தவர்கள்! எனவே உங்களை எது சந்தோஷப்படுத்துமோ! அந்த விஷயத்தை செய்யுங்கள். எதையும் தேடி துரத்திக் கொண்டு இருக்காதீர்கள்! அதை உங்களிடம் சாதுரியமாக வரவழையுங்கள்.

The post உங்களால் மட்டும் எல்லாரையும் போல சந்தோஷமாக இருக்க முடியலையா? அப்படி என்றால் நீங்கள் இந்த தவறு செய்கிறீர்கள் என்று அர்த்தம்! appeared first on Dheivegam.

from Dheivegam https://ift.tt/3eDEfUI

https://ift.tt/3cx7CFu
via IFTTT

No comments:

Post a Comment