நாம் பூஜை அறை மற்றும் சமையலறை போன்ற இடங்களில் எண்ணெய் வைப்பதற்கு ஒரு பாத்திரம் வைத்திருப்போம். பூஜை அறையில் வைக்கும் எண்ணெய் பாத்திரம் பிளாஸ்டிக்கில் இருந்தாலும் ஒன்றும் பிரச்சினையில்லை ஆனால் சமையல் செய்யும் அறையில் இருக்கும் எண்ணெய் பத்திரம் எவர்சில்வர் ஆக இருப்பது மட்டுமே நல்லது. இப்படி இருக்க சமையலறையில் இருக்கும் பாத்திரம் பிசுபிசுன்னு இருக்கும் பொழுது ரொம்ப சிரமப்படாம எப்படி மிகச் சுலபமாக நீக்கலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.
சமையல் செய்யும் பொழுது சமையல் எண்ணையை பத்திரமாக மிகவும் பக்கத்திலேயே வைத்திருப்போம். அப்போது தான் சமையல் செய்வதற்கு சுலபமாக இருக்கும். சமையலை ஆரம்பிக்கும் பொழுதே முதலில் எண்ணையை ஊற்றுவது தான் வழக்கம். எனவே எண்ணெய் வேறு ஒரு இடத்தில் வைக்காமல் அடுப்பின் பக்கத்தில் வைத்திருப்போம்.
சமையல் எண்ணெய்யை அடுப்பின் பக்கத்தில் வைக்கும் பொழுது சமையல் செய்யும் பொழுது சிதறும் எண்ணையும் சேர்த்து அதன் மீது பட்டுவிடும் ஆபத்து உண்டு. இதனால் எண்ணெய் பாத்திரத்தின் மீதும், எண்ணெய் வைத்திருக்கும் உட்புறமும் அழுக்குகள் சேர்ந்து சேர்ந்து அந்த பிசுபிசுப்பு தன்மை வந்துவிடும். எண்ணெய் பாத்திரத்தை தேய்க்க நினைப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது கட்டாயம் தேய்த்து விட வேண்டும்.
ஒவ்வொரு முறை எண்ணெய் மாற்றும் பொழுதும் ஒரு முறை பாத்திரத்தை தேய்த்து விட்டு மாற்றுவது மிகவும் நல்லது, ஆனால் இதனை தேய்ப்பதற்கு சிரமம் என்பதால் பலரும் மீண்டும் அப்படியே எண்ணெய் ஊற்றி விடுவதும் உண்டு. இதற்கு நம் வீட்டில் சாதம் வடிக்கும் கஞ்சி மட்டும் இருந்தால் போதும்.
சாதம் வடிக்கும் கஞ்சியில் இருக்கும் ஒரு வகையான நீர்மம் எண்ணெயுடன் சேரும் பொழுது அதனைத் தேய்ப்பதற்கு சுலபமாகவே இருக்கும். நீங்கள் சூடாக வடிக்கும் சாதத்தின் கஞ்சி தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் பாத்திரம் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும், பாத்திரத்தின் மூடியை திறந்து தனித்தனியாக சூடாக இருக்கும் கஞ்சி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
எல்லா இடங்களிலும் கஞ்சி தண்ணீர் படும்படி எடுத்து எடுத்து ஊற்றி ஊற வையுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து சாதாரண பாத்திரம் தேய்க்கும் சோப் அல்லது லிக்விட் கொண்டு அழுத்தி தேய்த்தால் போதும். எண்ணெயின் பிசுபிசுப்பு தன்மை எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் நொடியில் நீங்கிவிடும். மேலும் பாத்திரம் புத்தம் புதியதாக பளபளக்கும்.
எப்பொழுதும் சமையல் செய்ய பயன்படுத்தும் எண்ணெய் வைக்கும் பாத்திரத்தை பிளாஸ்டிக் பொருட்களில் அடைத்து வைக்கக் கூடாது. பிளாஸ்டிக் பொருட்களை தேய்ப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்பதால் இதனை எவர்சில்வர் பாத்திரங்களில் வைத்துக் கொள்வது நல்லது. எண்ணெய் ஊற்றி வைப்பதற்கு என்றே பிரத்யேகமாக எவர்சில்வர் பாத்திரங்கள் அழகாக விற்பனைக்கு உள்ளன.
அதுபோல் எண்ணெயை ஒவ்வொரு முறை நீங்கள் பயன்படுத்தும் பொழுதும் சட்டென ஊற்றி விட்டு எடுத்து வைத்து விடக்கூடாது. இதனால் அதில் இருந்து வழியும் எண்ணையும் சேர்ந்து பிசுபிசுப்பு தன்மை அதிகமாக சேர்ந்து விடும். பயன்படுத்தி விட்டு கீழே வைக்கும் பொழுது ஒரு துணியைக் கொண்டு துடைத்து வைத்து விட்டால் போதும்! அதிகம் சிரமப்படாமல் பாத்திரத்தை அதிக நாட்கள் வரை புதிதாகவே வைத்திருக்கலாம்.
The post எண்ணெய் வைக்கும் பாத்திரம் ரொம்ப பிசுபிசுன்னு இருக்கா? கஷ்டமே படாம இந்த 1 பொருள் கொண்டு ரொம்ப சுலபமா போக்கிடலாம்! appeared first on Dheivegam.
from Dheivegam https://ift.tt/3rFdGSJ

https://ift.tt/2OO5zovvia IFTTT
No comments:
Post a Comment