மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக அமையப்போகின்றது. சுபகாரியத் தடை நீங்கி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க தொடங்கும். உறவினர்களின் வருகையால் உங்களுக்கு சுப விரயச் செலவு தான். கொஞ்சம் கடன் வாங்கும் சூழ்நிலை இருந்தாலும், அதை சமாளித்து விடுவீர்கள். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது. வீடு நிலம் சொத்து வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. வீட்டில் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மட்டும் கொஞ்சம் அனுசரித்துப் போனால் வரக்கூடிய பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். வீண் விவாதங்களை தவிர்த்து கொள்ளுங்கள். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதி அற்புதமான வாரமாக தான் அமையப்போகின்றது. நீண்ட நாட்களாக உங்கள் மனதிற்குள் இருந்துவந்த துயரங்களுக்கு, சுமுகமான ஒரு முடிவு கிடைத்துவிடும். குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகளினால் வந்த மனஸ்தாபம் நீங்கும். வேலையில் இடமாற்றங்கள் வந்தால் அதனை ஏற்றுக் கொள்ளலாம். நல்ல முன்னேற்றம் தரும் வாரமாக தான் இருக்கும். முடிந்தவரை மேலதிகாரிகள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். அவசரப்பட்டு யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் இருந்தால் மேலும் நன்மையைப் பெறலாம். சொந்த தொழிலில் முதலீட்டை அதிகப்படுத்தி விரிவுபடுத்துவது லாபத்தை கொடுக்கும். தினந்தோறும் முருகன் வழிபாடு அதி அற்புத மான நன்மைகளைக் கொடுக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. தொழில் சம்பந்தமாக வெளி இடங்களுக்கு அலைய வேண்டிய சூழ்நிலை இருக்கும். இருப்பினும் உங்களது ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். மாஸ்க் அணியாமல் வெளியே செல்ல வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருந்து கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் நினைத்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. விடாமுயற்சியோடு செயல்படுங்கள். எப்போதும் தன்னம்பிக்கையை மட்டும் தளர விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மன உறுதி அடைய ‘ஸ்ரீராம ஜெயம்’ மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் முன் கோபப்பட்டு, அவசரப்பட்டு எந்த முடிவை எடுத்தாலும், நஷ்டம் உங்களுக்குத்தான். கொஞ்சம் நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் நிச்சயமாக வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம். தேவையற்ற மனக்குழப்பங்களுக்கு கூட சில நாட்களில் நல்ல பதில் கிடைக்கும். அவசரமே வேண்டாம். பொறுமையோடு இருந்தால் மட்டுமே போதும் வாழ்க்கையில் நீங்கள் ஜெயிக்க! அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் உங்கள் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். சொந்த தொழிலில் மூன்றாவது நபரை நம்ப வேண்டாம். தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் எவ்வளவுதான் முயற்சி எடுத்தாலும் உங்களுடைய முன்னேற்றத்தில் சில தடைகள் வரத்தான் செய்யும். நீங்கள் அமைதியாகவே இருந்தாலும் தேவையற்ற பிரச்சனைகள் உங்களைத் தேடி வந்து சில கஷ்டங்களை கொடுக்கும். இருப்பினும் பரவாயில்லை. அதனை சமாளிக்கக்கூடிய தெம்பு உங்களிடம் உள்ளது. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, ‘என்னுடைய வேலையில் நான் செய்கின்றேன் என்று இருந்தால் தப்பித்துக்கொள்ளலாம்’. தேவை இல்லாமல் வரக்கூடிய பிரச்சனைகளை இழுத்து வைத்துக்கொண்டாள் உங்களுடைய நிம்மதிதான் கெட்டுப்போகும். அனாவசியமாக வாயை திறக்கவே வேண்டாம். ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுமையோடு செயல்பட வேண்டும். எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். முன்னோர்களின் ஆலோசனையைப் பெற்று தெரிந்தவர்கள் 4 பேரிடம் கலந்தாலோசித்து, அதன்பின்பு நல்லதொரு முடிவை எடுங்கள். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சுபநிகழ்ச்சிகள் எந்த ஒரு தடையும் இல்லாமல் நடந்து முடியும். அவ்வப்போது பணப்பிரச்சனை இருந்து வந்தாலும் தேவைக்கு ஏற்ப கடன் தொகை கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை வந்தால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை ஏற்படும். சிவன் வழிபாடு நன்மை தரும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முயற்சிகளில் வெற்றி பெரும் வாரமாக அமையப்போகின்றது. ஏதாவது ஒரு தொழிலை புதியதாக தொடங்க வேண்டுமென்றால் தொடங்கலாம். புதிய வேலை தேடுவதாக இருந்தால் தேடலாம். புதிய சொத்துக்கள் வாங்குவதாக இருந்தாலும் வாங்கலாம். ஆனால் யாரையும் நம்பி பணத்தை கடனாக கொடுக்க வேண்டாம். அதிக கடனையும் வாங்க வேண்டாம். யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். பண பரிமாற்றத்தில் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுப செய்தி நண்பர்களின் மூலமாகவோ, கைபேசியின் மூலமாக உங்களை வந்து சேரும். நீண்ட தூர பயணம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. எந்த இடங்களுக்கு வெளியே செல்வதாக இருந்தாலும், ஜாக்கிரதையாக செல்லவேண்டும். ஆரோக்கியத்தை ஒருபக்கம் பார்த்துக்கொள்ளுங்கள். தேவையற்ற சிக்கல்கள் பிரச்சனைகள் இவைகளிலிருந்து சுலபமாக வெளிவந்து விடுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்த மனக்கசப்பு நீங்கி விடும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத முன்னேற்ற செய்தி வந்து சேரும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்தி தரும் வாரமாக அமையப்போகின்றது. கடந்த நாட்களாக இருந்து வந்த பணப் பிரச்சனை, கடன் பிரச்சனை, சொத்து பிரச்சனை, போன்ற பல பிரச்சனைகளுக்கு இந்த வாரம் விடிவு காலம் பிறந்து விடும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்ததை விட சொந்த தொழில் லாபம் அதிகமாகவே கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் வந்து குவியும். சந்தோஷத்திற்கு எந்த குறைவும் இருக்காது. எல்லா முயற்சிகளிலும் உங்களுக்கு வெற்றி தான். தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மையை தரும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப்போகின்றது. விருப்பமே இல்லை என்றாலும், நீங்கள் சில வேலைகளை செய்து தான் ஆகவேண்டும். ஓரளவிற்கு முன்னேற்றத்தை காண, நிறைய வேலை செய்தால்தான், ஓரளவிற்கு வருமானம் உங்களுக்கு கிடைக்கும். அவ்வப்போது கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். சிக்கனமாக செலவு செய்ய பழகிக் கொள்ளுங்கள். முன்னேற்றத்தில் அதிகப்படியான அக்கறை காட்டுங்கள். விடா முயற்சியை மேற்கொள்ளுங்கள். எல்லா விஷயங்களிலும் உஷாராக இருக்க வேண்டியது அவசியம். ‘ஸ்ரீராம ஜெயம்’ மந்திரத்தை மனதிற்குள் உச்சரியுங்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள போகிறீர்கள். ஆனால் பயப்படாதீர்கள். எல்லாவற்றையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உங்களிடம் உள்ளது. உங்களுக்கு இருக்கக்கூடிய பெரிய பெரிய கஷ்டங்கள் எல்லாம் கூட, இனி வரும் காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கி விடும். நீங்கள் வாங்கியிருக்கும் கடன் தொகையை முதலில் திருப்பிக் கொடுக்க பாருங்கள். மேலும் கடன் வாங்காதீர்கள். தேவையற்ற சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ தான் போகின்றது. பொறுமை காக்க வேண்டும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். முன் கோபம் கூடவே கூடாது. தினம்தோறும் உங்கள் குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி வேலையை தொடங்குங்கள்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல முன்னேற்றம் தரும் வாரமாக தான் இருக்கப்போகின்றது. உங்களுக்கு வரக்கூடிய சலுகைகளை நீங்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். சில விஷயங்களை செய்யாமல் விடுவதால், வாழ்க்கையில் முன்னேற்றம் பெரிய அளவில் பாதிக்கப்படும். கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், வேலையை முதலில் முடிக்க பழகிக்கொள்ளுங்கள். இன்றைக்கான வேலையை நாளைக்குத் தள்ளிப் போடவே கூடாது. கையில் வரும் பணத்தை சேமிக்க பாருங்கள். வீண்விரயம் செய்யவே கூடாது. எதிர்காலத்திற்கு நம்முடைய வாழ்க்கைக்கு சேமிப்பும் அவசியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். தினந்தோறும் முருகர் வழிபாடு நன்மையை கொடுக்கும்.
இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்
இந்த வாரம் ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.
The post இந்த வார ராசிபலன் 15-03-2021 முதல் 21-03-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு appeared first on Dheivegam.
from Dheivegam https://ift.tt/2KXq3rN

https://ift.tt/38HosQPvia IFTTT
No comments:
Post a Comment