ரவை இருக்கா உங்க வீட்ல? அப்ப யோசிக்காம ஜூஸியான, ஜீரா சொட்ட சொட்ட, இந்த ஸ்வீட்ட இப்பவே செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

உங்க வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, இந்த ரவை அப்பத்தை செய்துவிட முடியும். சுலபமான முறையில், இனிப்பு பலகாரம் பிடித்தவர்களுக்கும், வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும், இந்த ஸ்வீட்ட இன்னைக்கு ஈவ்னிங் ஸ்னாக்ஸா செஞ்சு கொடுங்க! வேலையும் நிறைய கிடையாது, பயன்படுத்தக்கூடிய பொருட்களும் நிறைய கிடையாது, சிரமமும் கிடையாது. ஆனால் சுவை மட்டும் அதிகமாக இருக்கும். இந்த ரவை அப்பம் எப்படி செய்வது என்று பார்த்துவிடலாமா?

ravai

Step 1:
முதலில் 1 கப் அளவு ரவை எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் ரவை, பொடி ரவையாக இருந்தால் பரவாயில்லை. அந்த ரவை கொஞ்சம் பெரிய ரவையாக இருந்தால், மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி விட்டு, அதன் பின்பு ஸ்வீட் செய்ய பயன்படுத்திக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக ஒரு 10 முந்திரிப் பருப்பையும், ஒரு ஏலக்காயையும் சின்ன மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக தூள் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முந்திரிப்பருப்பு வாசமும் ஏலக்காய் வாசமும், அப்பத்திற்கு மேலும் சுவையைக் கூட்டி தரும்.

Step 2:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, 1 கப் ரவையை போட்டு, கூடவே அரைத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பு பொடியையும் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் வரை ரவை வறுபட்டால் போதும். அதன் பின்பாக ரவையை அளந்த அதே கப்பில் 2 1/2 கப் அளவு காய்ச்சிய, ஆர வைத்த பாலை எடுத்து கடாயில், இருக்கும் ரவையில் ஊற்றி கைவிடாமல் கிளற வேண்டும்.

milk

ரவை கட்டி கட்டியாக ஆகக்கூடாது. கைவிடாமல் கிளறும் பட்சத்தில் ரவையும் பாலும் சேர்ந்து இறுகி ஒரு மாவு பதத்திற்கு வந்துவிடும். இதற்கு மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் வரை எடுக்கும். ரவையானது சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து விடுங்கள். அது கொஞ்சம் போல சூடு ஆரட்டும். ரொம்பவும் ஆற விட்டு விடக்கூடாது கை பொறுக்கும் சூடு இருக்கும் வரை மட்டும் ஆரட்டும்.

Step 3:
அதற்குள் ரவை அளந்த அதே கப்பில், 1 கப் அளவு சர்க்கரையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதே கப்பில் 1 கப் அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீரையும் சர்க்கரையையும் சேர்த்து கரைத்து விட வேண்டும். இதற்கு பாகு பக்குவம் எல்லாம் தேவையில்லை. சர்க்கரை தண்ணீரில் கரைந்து கொதித்து வந்தால் போதும். அதை 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடுங்கள் அவ்வளவுதான். (உங்களுக்கு ஏதேனும் எஸ்என்ஸ் வாசனை தேவைப்பட்டால் இந்த சர்க்கரை பாகில் ஊற்றிக் கொள்ளலாம்.)

rava-appam1

Step 4:
இப்போது மாவு கொஞ்சம் போல ஆரியிருக்கும். கை பொறுக்கும் அளவு சூடு வந்ததும், மாவை நன்றாக அழுத்தி, சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். அப்பம் செய்ய தேவையான அளவு மாவு உருண்டைகளை உருட்டி வைத்துக் கொண்டு. உள்ளங்கைகளில் வைத்து மசால் வடை தட்டுவது போல ஒரு அழுத்து அழுத்தி வட்ட வடிவில் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள். அதாவது கட்லெட் போல எல்லா, பக்கமும் தடிமன் ஒரே சீராக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். அதிகமான தடிமன் இருக்கக்கூடாது. ரொம்பவும் மெலிசாக தட்டக் கூடாது. ஒரு கால் இன்ச் அளவு தடிமன் இருந்தால் சரியாக இருக்கும்.

rava-appam2

Step 5:
ஒரு கடாயில் எண்ணெயை நன்றாக சூடு படுத்திக் கொண்டு, தயாராக வைத்திருக்கும் அப்பத்தை பூரி பொரிப்பது போல், எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். சூடான அப்பத்தை, சூடாக இருக்கும் சர்க்கரை பாகில் போட்டு விட்டு, 10 நிமிடங்கள் வரை ஊற விட்டு எடுத்து பாருங்கள்! ஜூஸ் சொட்ட சொட்ட ரவை அப்பம் தயார்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் நிம்மதியே இல்லை! என்று நினைப்பவர்கள் உங்கள் பிரச்சனை தீர, அமாவாசை அன்று இதை செய்து வாருங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

The post ரவை இருக்கா உங்க வீட்ல? அப்ப யோசிக்காம ஜூஸியான, ஜீரா சொட்ட சொட்ட, இந்த ஸ்வீட்ட இப்பவே செஞ்சு சாப்பிட்டு பாருங்க! appeared first on Dheivegam.

from Dheivegam https://ift.tt/3m6m5wb

https://ift.tt/33ikevF
via IFTTT

No comments:

Post a Comment